உஷார்! இவர்களெல்லாம் ஷவர்மா சாப்பிடக் கூடாது

81பார்த்தது
உஷார்! இவர்களெல்லாம் ஷவர்மா சாப்பிடக் கூடாது
400 முதல் 500 கலோரிகள் வரை ஒரு ஷவர்மாவில் உள்ள நிலையில் இதனை செலவிட 4 முதல் 5 மணிநேரம் நடக்க வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் மினரல், விட்டமின் போன்ற சத்துக்கள் குறைவாகவும் கார்போஹைட்ரேட் மிக அதிகமாகவும் உள்ளது. ஆகையால் செரிமானம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் இதை அறவே தவிர்க்க வேண்டும். வயது முதியவர்கள், இதய நோயாளிகளும் ஷவர்மாவை சாப்பிடுவது நல்லதல்ல. அனைத்து தரப்பினருமே அரிதாக சாப்பிடலாமே தவிர அடிக்கடி சாப்பிடக்கூடாது.

தொடர்புடைய செய்தி