டி20 உலகக் கோப்பை ஜூன் 4 முதல் 30 வரை நடைபெறுகிறது. இந்த மெகா போட்டிக்கான அணியை தேர்வு செய்வதற்கான பயிற்சிகளை பிசிசிஐ தேர்வுக்குழு மேற்கொண்டு வருகிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கோஹ்லி ஆகியோருடன் தேர்வுக்குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதுதவிர, இந்த குழு ஐபிஎல்லில் சுமார் 30 வீரர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும்.