வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலாகியுள்ள நிலையில், தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய அரசுக்கு சொந்தமான 'இந்திரா காந்தி கலாச்சார மையம்' தீக்கிரையாக்கப்பட்டது. மாணவர்கள் போராட்டம் கட்டுக்கடங்காமல் போனதை அடுத்து, வங்கதேச பிரதமர் யேக் ஹசினா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, நேற்றைய(ஆகஸ்ட் 5) வன்முறையில் வங்கதேச பிரதமர் மாளிகை, நாடாளுமன்றம் உள்பட பல்வேறு அரசு கட்டடங்கள் சூறையாடப்பட்டது.