ஔவையார் விருது பெறும் பாமா - முதலமைச்சர் வாழ்த்து!

55பார்த்தது
ஔவையார் விருது பெறும் பாமா - முதலமைச்சர் வாழ்த்து!
மரபுகளை உடைக்கும் தனித்துவமான எழுத்துநடையால் தமிழிலக்கியத்துக்குப் பங்காற்றி, ஔவையார் விருதுக்குத் தேர்வாகி இருக்கும் பாஸ்டினா சூசைராஜூக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், சாதி, மதம், பாலினம், இனம் எனப் பல்வேறு அடையாளங்களினூடே ஒடுக்குமுறையின் அரசியலை அழுத்தமாகப் பேசும் 'கருக்கு' எனும் தன்வரலாற்றுப் புதினத்தின் வழியாக உலக அளவில் கவனம் ஈர்த்த எழுத்தாளர் #பாமா (எ) பாஸ்டினா சூசைராஜ் அவர்கள் தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான ஔவையார் விருதைப் பெறுகிறார் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி