திண்டுக்கல்லை சேர்ந்த பெருமாள் (29) தனலட்சுமி தம்பதி. இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், தனலட்சுமி கடந்த மார்ச் 12ஆம் தேதி திருச்சி ஜெயில்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.