ஏடிஎம் கார்டு வைத்திருப்போர் கவனத்துக்கு.. எச்சரிக்கை

58465பார்த்தது
ஏடிஎம் கார்டு வைத்திருப்போர் கவனத்துக்கு.. எச்சரிக்கை
ஏடிஎம் கார்டு எண்ணை முறைகேடாக பயன்படுத்தி பணத்தைத் திருடும் சம்பவங்கள், சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறியதாவது, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பணம் திருடப்படுவதைத் தவிர்க்க பரிவர்த்தனைக்கு முன்பு ரத்து செய் என்பதை இருமுறை அழுத்தினால் பின் நம்பர் திருடப்படுவதை தவிர்க்கலாம் என ரிசர்வ் வங்கி கூறியதாக பரவும் செய்தி உண்மையில்லை என்று மத்திய அரசின் PIB Fact check பிரிவு எச்சரித்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி