ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கிகளுடன் நுழைய முயற்சி

60பார்த்தது
ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கிகளுடன் நுழைய முயற்சி
ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவனத் தலைவராக இருப்பவர் லோட்டஸ் மணிகண்டன். இவர் தனது ஆதரவாளர்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கலர் கலர் பொம்மை துப்பாக்கிகளுடன் நுழைய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை தடுத்து நிறுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது கடந்த 20 ஆண்டுகளாக இந்துத்துவா பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், பல புகார்கள் அளித்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் கொலைமிரட்டல் வருவதாக கூறிய அவர், தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வேண்டி மனு அளிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி