மீண்டும் இணையும் அட்லி - ஷாரூக் கூட்டணி

66பார்த்தது
மீண்டும் இணையும் அட்லி - ஷாரூக் கூட்டணி
பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படம் பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்நிலையில் இவர்கள் இருவரின் கூட்டணியில் இன்னொரு படம் வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து அட்லீ கூறுகையில், "ஜவானை விட சிறந்த கதை கிடைத்தால் கண்டிப்பாக அவரை மீண்டும் இயக்குவேன். கதை முடிந்ததும் அவரை சந்திப்பேன். என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகப்பெரிய மனிதர்களில் ஷாருக் ஒருவர். எப்பொழுதும் உற்சாகமாக இருக்கிறார். நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்." என்றார்.

தொடர்புடைய செய்தி