கபில் தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின்!

3233பார்த்தது
கபில் தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின்!
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்கா மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில், அஸ்வின் கபில்தேவின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 88 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் அஸ்வின், 400 விக்கெட்டுகளை கைப்பற்றி 3,000 ரன்களையும் குவித்து, இந்த சாதனையை படைத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 86 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருக்கும் நியூசிலாந்து முன்னாள் வீரர் ரிச்சர்ட் ஹாட்லீக்கு பிறகு இரண்டாவது வீரராக இந்த சாதனையை படைத்திருக்கிறார் அஸ்வின். இதே 400 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்கள் என்ற சாதனையை கபில்தேவ் 131 போட்டிகளில் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி