ரீல்ஸ் பார்த்தபடி பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் பணி நீக்கம்

53பார்த்தது
ரீல்ஸ் பார்த்தபடி பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் பணி நீக்கம்
திருப்பதியில் இருந்து பயணிகளுடன் அரசு பேருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ரீல்ஸ் பார்த்தபடியே, கவனக்குறைவாக பேருந்தை ஓட்டுநர் இயக்கி வந்துள்ளார். சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரையிலும், சாலையை கவனிக்காமல் ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதை பெண் பயணி ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை போக்குவரத்து பணிமனையில் உள்ள ஓட்டுநர்களிடம் காண்பித்து புகார் அளித்தார். இந்நிலையில் அந்த ஓட்டுநர் நிரந்தர பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி