மதுரையில் வழக்கறிஞர் பாலசுப்ரமணியம் (66) என்பவரிடம் செலவுக்கு 10 ரூபாய் கேட்டு, அவரைக் கட்டையால் தாக்கிய ராஜ்குமார் (34), அசோக் (32) ஆகிய இரு போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்துள்ளனர். முதலில் 10 ரூபாய் கொடுத்த பிறகு மேலும் 10 ரூபாய் வேண்டும் என இருவரும் கேட்க, பாலசுப்ரமணியம் மறுக்கவே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வழக்கறிஞரை தாக்கிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.