பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற 2 பேர் கைது

1046பார்த்தது
பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற 2 பேர் கைது
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்தவர் சதீஷ் (35). இவருக்கும் எருமநாயக்கன்பட்டியை சேர்ந்த சரவணக்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. நேற்றிரவு சரவணக்குமார் சதீஷிடம் பஸ் ஸ்டாண்டில் வைத்து தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த சதீஷ், சரவணக்குமாரை தாக்கினார். காயமடைந்த சரவணக்குமார், தன் தம்பி பிரேம்குமாரிடம் நடந்ததை தெரிவித்தார். ஆத்திரத்தில் இருந்த இருவரும் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து சென்ற சதீஷை வழிமறித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை சதீஷ் மீது ஊற்றி தீ வைத்தனர். சிகிச்சையிலிருந்த சதீஷ் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். சரவணக்குமார், பிரேம்குமாரை போலீசார் 7 மணி நேரத்தில் விருதுநகரில் வைத்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி