'பெரம்பூர் காகித ஆலை சாலைக்கு' ஆம்ஸ்ட்ராங்க் பெயர்: சீமான் கோரிக்கை

60பார்த்தது
'பெரம்பூர் காகித ஆலை சாலைக்கு' ஆம்ஸ்ட்ராங்க் பெயர்: சீமான் கோரிக்கை
'பெரம்பூர் காகித ஆலை (பேப்பர் மில்) சாலைக்கு' ஆம்ஸ்ட்ராங்க் பெயரைச் சூட்ட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஆம்ஸ்ட்ராங்க் ஆற்றிய சமூகப் பணிகள்தான், இத்தனை இலட்சம் மக்களின் பேரன்பைப் பெற்றிட முதன்மையான காரணம். ஆகவே, தமிழ்நாடு அரசு பெரம்பூர் காகித ஆலை (பேப்பர் மில்) சாலைக்கு அவரது பெயரைச் சூட்டி நினைவைப் போற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி