அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த கட்சியினர்

2561பார்த்தது
பெரம்பலூரில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினர், அம்பேத்கர்
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

டாக்டர் அம்பேத்காரின் 133வதுபிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி காலை 11: 30 மணி அளவில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதன் படி காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ரஞ்சித்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதனைத் தொடர்ந்து, திமுக சார்பில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் ஆகியோர் தலைமையிலும், விசிக சார்பில் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமையிலும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் செயலாளர் வழக்கறிஞர் காமராசு தலைமையிலுயிலும், பாரதிய ஜனதா கட்சி சார்பில், மாவட்ட தலைவர் செல்வராஜ், மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியம், மற்றும் அம்பேத்கர் நற்பணி மன்றம், பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்க கோஷமிட்டும், சமூக நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்தும் மரியாதை செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி