ஓடும் பேருந்திலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை

1907பார்த்தது
ஓடும் பேருந்திலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை
பெரம்பலூரில் இருந்து திருச்சி துறையூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பயணம் செய்த வாலிபர் படிக்கட்டு வழியாக குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் பஸ்ஸை நிறுத்தி வாலிபரை மீட்டனர். பஸ்ஸிலிருந்து குதித்ததில் தலையில் பலத்த காயமடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாடலூர் போலீசார் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் துறையூர், தெற்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் வினோத் ( வயது 21 ) என்பதும், அவர் அங்குள்ள பூக்கடை ஒன்றில் பூக்கட்டும் வேலை செய்வதும் தெரியவந்தது.இவர் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வினோத் பெரம்பலூருக்கு வந்துவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருக்கும் போது போனில் அந்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில் ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து வினோத் தற்கொலை செய்து கொண்டாரா: அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி