அரியலூர் மாவட்டம் , ஆண்டிமடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று திடீரென்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சார்பதிவாளர் சண்முகம் மற்றும் புரோக்கர் மணி ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூபாய் 30, 000 பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். சோதனை நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் முடிவடைந்தது. இதனை அடுத்து சார் பதிவாளர் மீதான துறை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என கூறப்படுகிறது.