அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கழுவன் தோண்டி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை தனது டூவீலர்கள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று ஐயப்பனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.