சிலருக்கு சாப்பிட்ட உடனேயே மீண்டும் பசி எடுக்கும். இதற்குப் பின்னால் சில குறிப்பிட்ட காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உணவில் புரதச் சத்து இல்லாமை, தூக்கமின்மை, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் அதிகம் சாப்பிடுதல். இது தவிர உணவில் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பதும் பசியை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது, நார்ச்சத்து குறைந்த உணவுகளை உண்பது போன்றவையும் இந்தப் பிரச்னையை ஏற்படுத்துகிறது.