ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கேஷ்பேக் ஆஃபரை நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, நீங்கள் செய்யும் ரீசார்ஜில் இருந்து உங்களுக்கு 25% கேஷ் பேக் கிடைக்கும். இந்த ஸ்பெஷல் கேஷ்பேக் ஆஃபரை பயன்படுத்துவதற்கு நீங்கள் ஏர்டெல் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பேமெண்ட் செலுத்த வேண்டும். இந்த கிரெடிட் கார்டு வழங்கப்பட்ட 30 நாட்களுக்கு உள்ளாக கார்டு ஆக்டிவேஷன் செய்பவர்களுக்கு ரூ.500 மதிப்பிலான அமேசான் வவுச்சர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.