சில ஆண்களுக்கு பருவ வயதை அடைந்த பின்னர் மார்பகம் பெரிதாக இருக்கும். இதற்கு ‘கைனகோமேஸ்டியா’ என்று பெயர். இது மார்பகங்ளில் சேரும் கொழுப்புகள், பெண்களில் காணப்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஆண்களில் அதிகம் காணப்படுதல் மற்றும் டெஸ்டிரோஸ்டோன் குறைவு காரணமாக ஏற்படுகிறது. இது 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு சில மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும். ஆனால் முற்றிய நிலையில் இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு.