தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் கடந்த அக் 25ஆம் தேதி சாலையோர உணவுக்கடையில் மோமோஸ் சாப்பிட்டதால் உணவு விஷமாகி சிங்கடிகுண்டாவை ரேஷ்மா என்ற 29 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 20 பேர் வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உணவு மாதிரிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.