ஜப்பான் நாட்டில் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்சு மாகாணத்தில் சக்திவாய்ந்த
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் ஏற்பட்ட
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஜப்பானில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த
நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.6 ஆக பதிவாகி இருந்தது. கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.