அதிமுகவுடன் கூட்டணி இல்லையென மறுக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணமலை, அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு, "காலமும் சூழலும் முடிவு செய்யும், கூட்டணி இல்லை என்று மறுக்கவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தல் வித்தியாசமான ஒரு புதிய அரசியல் களமாக அமையும். பாஜகவிடம் வலிமையான கூட்டணி இருக்கிறது" என பேட்டியளித்துள்ளார்.