அண்ணாமலை தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

51பார்த்தது
அண்ணாமலை தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்
சென்னை அமைந்தகரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று (மே 27) ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், 65 மாநில பாஜக நிர்வாகிகள், 66 மாவட்ட தலைவர்கள், 67 நாடாளுமன்ற மையக் குழுவினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பூத் ஏஜெண்டுகளுக்கான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தபோது பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி