விலங்களுக்கும் தாய் பாசம் உள்ளது என இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது. புதுச்சேரி மண்ணாடிபட்டு என்ற பகுதியில் தாய் பூனையை இழந்து பசியில் இருந்த பூனைக்குட்டிக்கு நாய் ஒன்று பாசத்துடன் பால் கொடுத்த வீடியோ இணையவாசிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாயும் பூனையும் இயற்கையாகவே எதிரிகள் என்றாலும் தாய் பாசத்திற்கு முன்பு எல்லாம் தோற்று போகும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.