பிரபல இயக்குனரிடம் திருடிய உதவி இயக்குனர்

83பார்த்தது
பிரபல இயக்குனரிடம் திருடிய உதவி இயக்குனர்
சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் இயக்குநர் தேசிங் பெரியசாமி. இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வந்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், என்னிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் முகமது இக்பால் என்பவர் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். என்னுடைய வரவுசெலவு கணக்குகளை பார்த்து வந்தார். அவரிடம் 150 கிராம் நகையை கொடுத்து அடகு வைத்து பணம் வாங்கி வாருங்கள் என கொடுத்ததில் கிடைத்த 3 லட்சத்தை கையாடல் செய்துவிட்டார். மேலும் எனக்கும் எனது மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்தார் என புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி