உண்மை தகவல்களை மறைத்து பொது நல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், நிலத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழங்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் வழக்கு தொடர்ந்த மனுதாரர் அடுத்த ஓராண்டுக்கு பொது நல வழக்கு தாக்கல் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.