கரூரில் நிலமோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் இன்று (ஜூலை 29) நேரில் சந்தித்தனர். பின்னர் பேட்டியளித்த சி.வி.சண்முகம், அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு அடக்கி ஒடுக்கி விடலாம் என்ற எண்ணம் ஒரு போதும் பலிக்காது என கூறிவிட்டுச் சென்றுள்ளார்.