RTO-வை கொல்ல முயன்ற அதிமுக நிர்வாகி கைது

52பார்த்தது
RTO-வை கொல்ல முயன்ற அதிமுக நிர்வாகி கைது
புதுக்கோட்டை மாவட்டம் அருகே மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற RTO-வை லாரி ஏற்றிக் கொலை செய்ய முயன்றனர். இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வநாயகியின் கார் மீது லாரி உரிமையாளரான அதிமுக நிர்வாகி சுந்தரம் என்பவர் லாரியை ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது சுந்தரம் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி