அதிமுக முதல் நாள் நேர்காணல் நிறைவு

69பார்த்தது
அதிமுக முதல் நாள் நேர்காணல் நிறைவு
மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நடைபெற்ற முதல் நாள் நேர்காணல் நிறைவடைந்துள்ளது. 20 தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தினார். நாளைய தினம் மீதமுள்ள 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட உள்ளது. திருவள்ளூர், வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், சேலம், நாமக்கல் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடமும் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி