‘ஊழல் பேர்வழி’ கெளதம் அதானி மீது பாயாது, உண்மையைச் சொன்ன மருத்துவர் ராமதாஸ் மீது பாய்வதா? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், திமுக அரசுக்கும், அதானிக்குமான உறவு குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்த அறிக்கை பற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாத முதல்வர் ஸ்டாலின், அவமதிக்கும் வகையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. சிறுமைப்படுத்தும் வகையிலான முதல்வர் ஸ்டாலினது அலட்சியப்பேச்சு அரசியல் அநாகரீகம் என கூறியுள்ளார்.