நடிகை ரம்யா பாண்டியனுக்கு அவருடைய காதலர் தவோன் என்பவருடன் இன்று (நவ. 8ஆம் தேதி) ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதிக்கரையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவர்களது திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தமிழில் 'ஜோக்கர்' படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா பாண்டியன், 'குக் வித் கோமாளி', 'பிக் பாஸ்' நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே பிரபலமானார்.