தனது காதலை வெளிப்படுத்திய நடிகை லட்சுமி மேனன்

57பார்த்தது
தனது காதலை வெளிப்படுத்திய நடிகை லட்சுமி மேனன்
'கும்கி', 'சுந்தரபாண்டியன்' உள்ளிட்டப் பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை லட்சுமி மேனன். வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை லட்சுமி மேனன் தனது காதலன் குறித்து பகிர்ந்தார். அப்போது அவர் பேச்கையில், பள்ளியில் படிக்கும்போது ஒருவரிடம் காதலை சொன்னேன். சில நாட்கள் கழித்து அவர் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். அடிக்கடி நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டோம். குடும்பத்தினருக்கு தெரியாமல் இருக்க போர்வைக்குள் இருந்து கொண்டு பேசுவேன். சினிமா வாய்ப்புகள் வந்ததால் படிப்பையும், காதலையும் தொடர முடியவில்லை. அவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாக கேள்விப்பட்டேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி