திருத்தணியில் நடிகர் யோகி பாபு தரிசனம்

568பார்த்தது
திருவள்ளூர்: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். புத்தாண்டையொட்டி, நள்ளிரவு 12 மணிக்கு நடிகர் யோகி பாபு சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் மலர்மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கி கௌரவம் செய்தனர். இதனைத் தொடர்ந்து யோகி பாபு உடன் பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர். இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்ய மலைக்கோவிலில் குவிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி