தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று (பிப். 24) மாநிலம் முழுவதும் கட்சியினரால் கொண்டாடப்படும் வேளையில் அதிமுகவை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் திரையுலகினரும் ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.