"மகாராஜா" படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் விஜய்

77பார்த்தது
"மகாராஜா" படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் விஜய்
"மகாராஜா" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 18) "மகாராஜா" படக்குழுவை நேரில் அழைத்து நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியான "மகாராஜா" திரைப்படம் விஜய் சேதுபதிக்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது. இந்த வெற்றியை அடுத்து, "மகாராஜா" படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் மற்றும் தயாரிப்பாளர் சுதனை நேரில் அழைத்து நடிகர் விஜய் பாராட்டியுள்ளார். தற்போது, இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி