வெற்றிமாறனுக்கு நடிகர் சூரி வாழ்த்து

681பார்த்தது
வெற்றிமாறனுக்கு நடிகர் சூரி வாழ்த்து
இயக்குநர் வெற்றிமாறன் இன்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இயக்குநர் பாலு மகேந்திராவிடம் துணை இயக்குனராக வெற்றிமாறன் இருந்தார். இதனால், அவருக்கு ஆழ்ந்த வாசிப்பு பழக்கம் உண்டு. தன் குருவைப் போலவே புத்தகங்களை படமாக்குவதில் அவருக்கு ஆர்வம் அதிகம். அதன்படி, விசாரணை, அசுரன், விடுதலை என தொடர்ந்து நாவல்களையும், சிறுகதைகளையும் படமாக்கி வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறார். இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் சூரி தனது ட்வீட்டர் பக்கத்தில். “எளிய மக்கள் வாழ்வியல் பேசும், உலக சினிமாவை தமிழ் மொழியில் தரும், மாபெரும் படைப்பாளி அண்ணன் வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி