திருத்தணி முருகன் கோவிலில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் மொரட்டு சிங்கிள் பட்டியலில் முன்னணியில் இருந்த நடிகர் பிரேம்ஜிக்கு ஒருவழியாக இன்று (ஜுன் 9) திருமணம் நடந்து முடிந்துள்ளது. 1979ஆம் ஆண்டு பிறந்த 70“ஸ் கிட்ஸ் ஆன பிரேம்ஜிக்கு பல ஆண்டுகளாக திருமணம் ஆகாமால் இருந்தது. இந்த நிலையில், இன்று திருத்தணி கோவிலில் திருமணம் நடைபெற்றது. சேலத்தை சேர்ந்த வங்கி ஊழியர் இந்து என்பவரை பிரேம்ஜி கரம்பிடித்தார். இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், வெங்கட் பிரபு பட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.