BREAKING: தமிழகத்தில் பயங்கர விபத்து.. 3 பேர் பலி

95790பார்த்தது
தருமபுரி தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்ின் மீது 2 லாரிகள், 3 கார்கள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கீழே விழுந்த வாகனத்தில் இருந்து 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் நெல் பாரம் ஏற்றிச்சென்ற ஒரு லாரியும், 2 கார்களும் தீப்பற்றி எரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.