தமிழ்நாட்டில் நிகழ்ச்சி ஒன்றில் முன்னர் பங்கேற்க அப்துல் கலாம் வந்த போது விழா மேடையில் வரிசையாக நாற்காலிகள் இருந்தன. அதில் நடுவாக போடப்பட்டிருந்த நாற்காலி மட்டும் மற்ற நாற்காலிகளை விட சிறப்பானதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதில் அவர் அமர வேண்டும் என அதிகாரிகள் கூற அதை ஏற்க மறுத்த அப்துல் கலாம் அந்த நாற்காலியை அகற்றுமாறு கூறிவிட்டார். இதனை தொடர்ந்து எல்லோரையும் போல சாதாரண நாற்காலியிலேயே அமர்ந்தார்.