ஓடிடியில் வெளியாகும் 'ஆடு ஜீவிதம்' திரைப்படம்

78பார்த்தது
ஓடிடியில் வெளியாகும் 'ஆடு ஜீவிதம்' திரைப்படம்
இயக்குனர் பிளஸ்சி இயக்கிய "ஆடு ஜீவிதம்" படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்தார். அமலாபால் நாயகியாக நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். கடந்த மார்ச் 28ஆம் தேதி இந்த படம் திரையரங்கில் வெளியானது. இப்படம் வெளியாகி 9 நாட்களில் ரூ.100 கோடி என்ற இலக்கை எட்டியது. தற்போதுவரை இப்படம் ரூ.157 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில், இப்படம் வரும் 19-ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி