பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட இளம் பெண்

50பார்த்தது
பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட இளம் பெண்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கரட்டடி பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று பார்த்தபோது ஒரு ஆண் தப்பி ஓடியுள்ளார். பின்னர் அந்த வீட்டில் இருந்து 21 வயது பெண் மீட்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரித்ததில், பனியன் கம்பெனியில் வேலை பார்த்த போது சண்முக வடிவு(60) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் தான் ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் தொழிலில் தள்ளியதாக கூறியுள்ளார். இதனையடுத்து சண்முகவடிவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி