விரும்பிய பெண் கிடைக்காததால் தொலைந்து போன இளைஞர்

78பார்த்தது
விரும்பிய பெண் கிடைக்காததால் தொலைந்து போன இளைஞர்
கோவையை சேர்ந்த 30 வயது இளைஞர் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்த நிலையில் பெண்ணொருவரை உயிருக்கு உயிராக காதலித்தார். இருப்பினும் வாலிபரை அந்த பெண் காதலிக்கவில்லை, இதனால் விரக்தியின் விளிம்புக்கு சென்ற அவர் உறவினருக்கு போன் போட்டு சாகப் போவதாக சொல்லிவிட்டு எங்கோ சென்றுவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் காதலிக்கும் பெண் யார்? அவரை தேடித்தான் இளைஞர் சென்றாரா? அல்லது தற்கொலைக்கு துணிந்து விட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.