காய்கறி விற்றவர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை

540பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் கராணி விஹார் பகுதியில், காய்கறி விற்கும் இளைஞர் ஒருவர் போலீஸ்காரன் மகன் ஒருவனால் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. அந்த பதிவில் இரவு நேரத்தில் வெளியில் நின்று கொண்டிருந்த மோகன் என்ற இளைஞரை, மற்றொரு இளைஞர் கிரிக்கெட் மட்டை கொண்டு பலமாக அடிக்கிறார். கீழே சுருண்டு விழும் மோகனை அந்த இளைஞர் காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் மோகன் உயிரிழந்து விட்டதாக கூறி இருக்கின்றனர். இந்த மரணத்தில் சந்தேகம் இருந்த மருத்துவர்கள், கராணி விஹார் போலீசாருக்கு தகவல் கொடுக்க, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி