கோவையை சேர்ந்த வைஷ்ணவ்ராஜ் தைவானில் வேலை செய்து வரும் நிலையில் அந்நாட்டை சேர்ந்த ஜிம்மிசாங்-மிக்கிவாங் தம்பதியர் மகளும் ஆசிரியையுமான கிளாடியா சாங் என்பவருடன் ஒருங்கிணைந்து சமூகசேவையில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது. காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டிய நிலையில் நேற்று முன்தினம் (டிச. 07) கோவையில் தமிழ் முறைப்படி வைஷ்ணவ்ராஜ் - சாங் திருமணம் நடந்தது.