சேலம்: ஆத்தூரை அடுத்த தென்னங்குடிபாளையம் மாரியம்மன் நகர் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் போராடி பிடித்தனர். காளி என்பவர் அவரின் கரும்புத்தோட்டத்தில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்த போது சரசரவென சத்தம் கேட்டதால் உள்ளே பார்த்த போது மிகப்பெரிய மலைப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.