கர்நாடகாவை சேர்ந்த ஒரு விவசாயி டிராகன் பழத்தினை சாகுபடி செய்து அதனை ஒரு வெற்றிகரமான தொழிலாக மாற்றியுள்ளார். தக்சின் கனடா பகுதியை சேர்ந்த விவசாயி தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் டிராகன் பழ சாகுபடியில் ஈடுபட்டுள்ளார். இவர் தன்னுடைய நிலத்தில் டிராகன் பழம் மட்டுமில்லாமல் ரம்புட்டான், அன்னாசி பழ மரங்களையும் வளர்க்கிறார். பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் இவரிடமிருந்து நேரடியாக டிராகன் பழங்களை கொள்முதல் செய்கின்றனர்.