பிரபல பாலிவுட் நடிகையை காணவில்லை

73326பார்த்தது
பிரபல பாலிவுட் நடிகையை காணவில்லை
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது 5 ஆயிரம் ராக்கெட்டுகளால் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பாலிவுட் நடிகை நுஷ்ரத் பரூச்சா இஸ்ரேல் நாட்டில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைபா சர்வதேச விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற அவரை நேற்று பிற்பகல் முதல் தொடர்புகொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. அவரை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி