ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு

75பார்த்தது
கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் ஆழ்துளை குழாய் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சாத்விக், 18 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தனது தாத்தா, விவசாய நிலத்தில் தண்ணீருக்காக தோண்டிய 18 அடி ஆழத்தில் குழந்தை தலைகீழாக விழுந்திருந்த நிலையில், பக்கவாட்டில் குழி தோண்டி கீழிருந்து மேலாக சென்று மீட்புப் படையினர் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். மருத்துவக்குழு தயார் நிலையில் இருந்த நிலையில் குழந்தைக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

Courtesy: Karnataka Tak

தொடர்புடைய செய்தி