அதிக நேரம் ஏ.சி. காத்து வாங்குவீர்களா? இனி உஷார்..!

84பார்த்தது
அதிக நேரம் ஏ.சி. காத்து வாங்குவீர்களா? இனி உஷார்..!
அலுவலகங்கள் மட்டுமின்றி வீடுகளிலும் தவிர்க்க முடியாத மின்சாதனப் பொருட்களுள் ஒன்றாக ஏ.சி. விளங்குகிறது. வெயிலில் இருந்து தப்பிக்க மணிக்கணக்கில் ஏ.சி.யில் பலரும் இருக்கிறோம். இதை அதிகம் பயன்படுத்தினால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்? தூசு, நுண் துகள்கள், மாசுபட்ட காற்றில் கலந்திருக்கும் கிருமிகள் ஏ.சி. மூலம் பரவி ஒவ்வாமையையும், சிலருக்கு ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக்கோளாறு பிரச்சனையை ஏற்படுத்தும். ஏர் கண்டிஷனர்களில் இருந்து வரும் குளிர்ந்த காற்று சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் தலைவலி, சோர்வை ஏற்படுத்தலாம். நீண்ட நேரம் ஏ.சி.யில் இருப்பது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

தொடர்புடைய செய்தி